கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் 26 பேருக்கு கன்று வளர்ப்பதற்கு கடனுதவி

3 November 2020, 8:13 pm
Quick Share

திருப்பூர்: காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் 26 பேருக்கு ரூ.22 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பெண் கன்றுக்குட்டி வளர்ப்பதற்கு மத்திய கால கடன்திட்டத்தில் ரூ.22 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் 26 பேருக்கு, பெண்மாட்டு கன்றுக்குட்டி வளர்ப்பதற்கு கடனுதவியாக தலா ரூ.87 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 லட்சத்து 62 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

இந்த கடனுதவியை 6 மாதத்திற்கு ஒருமுறை குறைந்த வட்டியில் ரூபாய் 8700விதம் 5 வருடங்கள் விவசாயிகள் திருப்பிச்செலுத்தும் வகையில் வழங்கப்பட்டது. சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவரும் அதிமுக நகர செயலாளருமான வெங்கு ஜி.மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கடன் தொகையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலர் மவுனராஜ் மற்றும் சங்க அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 21

0

0