1323 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கே.பி.அன்பழகன்

23 September 2020, 9:03 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.3.17 கோடி மதிப்பில் 1323 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் வருவாய்த்துறையின் மூலம் புதிய மின்னணு குடும்ப அட்டை 803 பயனாளிகளுக்கு ரூ.44.165 இலட்சம் மதிப்பிலும், இயற்கை மரணம் உதவித்தொகை 57 பயனாளிகளுக்கு ரூ.12.825 இலட்சம் மதிப்பிலும், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 50 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 13 பயனாளிகளுக்கு ரூ.15.60 இலட்சம் மதிப்பிலும், இலவச வீட்டுமனைப்பட்டா 297 பயனாளிகளுக்கு ரூ.118.8 இலட்சம் மதிப்பிலும்,

விபத்து நிவாரணத்தொகை 12 பயனாளிகளுக்கு ரூ.12.30 இலட்சம் மதிப்பிலும்,திருமண உதவித்தொகை 44 பயனாளிகளுக்கு ரூ.3.54 இலட்சம் மதிப்பிலும், விதவை உதவித்தொகை 24 பயனாளிகளுக்கு ரூ.28.8 இலட்சம் மதிப்பிலும், இந்திராகாந்திதேசிய விதவை உதவித்தொகை 13 பயனாளிகளுக்கு ரூ.15.6 இலட்சம் மதிப்பிலும், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.2.4 இலட்சம் மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் மூலம் நுண்ணீர் பாசனம் 5 பயனாளிகளுக்கு ரூ.1.418 இலட்சம் மதிப்பிலும்,

தோட்டக்கலைதுறையின் மூலம் மலைப்பயிர்கள் மானியமாக 3 பயனாளிகளுக்கு ரூ.1.07 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் 1323 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.