கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

By: Udayaraman
15 October 2020, 6:20 pm
Quick Share

விருதுநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்

தமிழ்நாட்டில் நெசவு தொழில் நலிவடையாமல் இருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி நெசவாலார்கள் வாழ்க்கை தரத்தை மேம்பட உதவி புரிந்து வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் வகையில் பல வித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டு சேலைகள், வெண்பட்டு சேலைகள்,

தற்போது உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவைகள், கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடிச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், நவீன காலத்திற்கு உகந்த ஜீன்ஸ், டாப்ஸ், குர்தா வேட்டி, சுடிதார் மற்றும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாககாட்டன் சட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சிறப்பு விற்பனை துவங்கப்பட்டு உள்ளது இந்த ஆண்டுக்கான முதல் விற்பனை துவங்கி வைத்தார். 2020-21 ஆண்டிற்கு தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.55.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Views: - 55

0

0