சமயபுரம் கோவிலில் புகுந்த 3 அடி நல்லபாம்பு: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…

Author: kavin kumar
17 August 2021, 5:35 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகம் தேரோடும் வீதியில் ஆடு, கோழிகளை காணிக்கைகளாக செலுத்தும் இடத்தில் புகுந்த 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம்கோயிலில் ஆடு,கோழிகளை காணிக்கைகளாக செலுத்தும் இடத்தில் 3 அடி நீளம் உள்ள நல்லபாம்பு புகுந்ததாக சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் விஜயகுமார், ஜீவா, அலெக்சாண்டர், சதீஷ்குமார்,பெரியசாமி, உள்ளிட்ட வீரர்கள் விரைந்து வந்து சமயபுரம் கோயில் வளாகத்தில் காணிக்கை செலுத்தும் இடத்தில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்க தீவிர முயற்சி கொண்டனர்.ஆனால் பாம்பு அங்கும் இங்கும் போக்கு காட்டியது சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப்பின் பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் பாம்பை சாக்கு பையில் அடைத்து வயல்வெளி காட்டுப்பகுதியில் பாம்பை பத்திரமாக விட்டனர்.

Views: - 180

0

0