ஸ்ரீகைலாச நாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Author: Udhayakumar Raman
24 March 2021, 3:01 pm
Quick Share

மயிலாடுதுறை: ஸ்ரீகைலாச நாதர் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் மாத்துரில் பழமை வாய்ந்த ஸ்ரீகைலாச நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புனரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, மகா கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.

இன்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் புனித நீர் அடங்கிய கடங்கள் ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.

Views: - 59

0

0