மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

14 June 2021, 3:58 pm
Quick Share

மயிலாடுதுறை: திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் லலிதா ஐஏஎஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் அறிகுறிகள் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கின்ற வகையில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவா என்பதை கேட்டறிந்து உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவி ஆகியவைகள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது முகாம்கள் நடத்தப்படுகிறது திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் கொரோனாத் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றி நடந்திட வேண்டும்.

அத்தியாவசிய பணிகளை தவிர வேறு தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். என மாவட்ட ஆட்சியர் லலிதா ஐஏஎஸ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை கண்ணன், ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேஷ், மருத்துவர் அபிநயா, ஊராட்சி மன்றம் தலைவர் ஜெயமாலினி சிவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 111

0

0