எம்எல்ஏ பேச்சால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு: ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

Author: Udhayakumar Raman
5 August 2021, 11:19 pm
Quick Share

காஞ்சிபுரம்: வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்ற ரீதியில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பேசியதால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது தன்னை அறியாமலேயே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நிர்வாகிகள் மனு வாங்க வேண்டும் என்றும் “ஒருவேளை திமுக கட்சியுடன் கூட்டணி அமையாத பட்சத்தில் ” ஒன்றிய கவுன்சில் மற்றும் மாவட்ட கவுன்சில் பதவிகளுக்கு தனித்து நின்று போட்டியிடுவோம் என்றும் கூறியதால் மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் லேசான சலசலப்பு காணப்பட்டது. மேலும் கூட்டத்திற்கு வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையேயும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 83

0

0