டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் ஆட்சியரிடம் முறையிட்ட தாய்மார்கள்

4 September 2020, 3:35 pm
Quick Share

மதுரை: மதுரை மாநகரில் புதியதாக அமைக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாநகர் எல்லீஸ்நகர் பகுதியில் ஏற்கனவே ஐந்துக்கு மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள சத்யமூர்த்தி நகர் பகுதியில் புதியதாக மேலும் ஒரு மதுக்கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக புதிய கடையை அமைக்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டியும், மேலும் ஏற்கனவே உள்ள மதுக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுடன் ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். குழந்தைகளுடன் தாய்மார்கள் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0