கிறிஸ்தவ தலித்துகளை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி துக்கநாள் போராட்டம்

10 August 2020, 6:35 pm
Quick Share

தூத்துக்குடி:  கிறிஸ்தவ தலித்துகளை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தூத்துக்குடியில் துக்கநாள் போராட்டம் நடைபெற்றது.

சுதந்திரம் அடைந்த ஆண்டுமுதலாக மதம் மாறிய கிறிஸ்தவர்களை அரசு கிறிஸ்தவர்களாக அறிவித்து சட்டம் இயற்றி உள்ளது. இந்த மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறிய காரணத்தினால் பிற்படுத்தபட்டவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காமல் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகள் தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் செய்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் ஆண்டகை தலைமையில் அவரது அலுவலகத்தில் இந்த கருப்பு தின போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆன்லைன் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலித் கிறிஸ்தவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆயர் ஸ்டிபன், கடந்த 70 ஆண்டுகளாக இந்த கருப்புதின போராட்டம் நடைபெற்று வருகின்றது. படித்தவர்களுக்கும் சமுகத்தில் முன்னிலையில் இருபவர்களுக்கும் அரசு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்தவர்களுக்கு இன்னும் சமமாக இடஒதுக்கீடு வழங்காமல் இருப்பது வருத்ததிற்குரியது. அதனை வலியுறுத்தி இன்றைய தினம் துக்க நாளாக கூறி எங்களது கண்டனத்தை அமைதியான முறையில் தெரியபடுத்தி வருகிறோம். மத்திய அரசு உடனடியாக இந்த விசயத்தில் கவனம் கொண்டு கிறிஸ்தவ தலித்துகளை பிற்படுத்த பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

Views: - 12

0

0