சீர்காழியில் நடைபெற்ற ஆன்லைன் ஓவிய மாரத்தான் உலக சாதனை: 812 அடி நீள ஓவியத்திற்கு அங்கிகாரம் வழங்கல்…

15 August 2020, 9:51 pm
Quick Share

நாகப்பட்டினம்: சீர்காழியில் நடைபெற்ற ஆன்லைன் ஓவிய மாரத்தான் உலக சாதனை போட்டியில் 812 அடி நிளம் கொண்ட மாராத்தான் ஓவியம் உருவாக்கபட்டது.

நாகை மாவட்டம் மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ முத்துராஜம் கல்வி நிறுவனம் மற்றும் ஜாக்கி கிரியேஷன் இனைந்து கொரோனா காலத்தின் நினைவுகளை பதிவு செய்யும் விதமாக ஆனைலையன் ஓவிய மாராத்தான் உலக சாதனை போட்டியை அறிவித்தனர். இதில் பல்வேறு மாவட்டங்கள்,வெளி மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் 600 பேர் பங்கேற்றனர். 3 வயது குழந்தைகள் முதல் 76 வயது முதியவர்கள் வரை உள்ளவர்கள் பங்கேற்று கொரோனா பாதிப்பு, பொது முடக்க பாதிப்பு, கொரோனா தொற்று தற்காப்பு, மற்றும் விழிப்புணர்வு என பல்வேறு ஓவியங்களை வரைந்து அனுப்பினர்.

சுதந்திர தினமான இன்று சீர்காழி நவகிரகா தங்கும் விடுதியில் உலக சாதனையை பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து ஓவியங்களும் இனைக்கபட்டு 812 அடி நிளம் கொண்ட மாராத்தான் ஓவியம் உருவாக்கபட்டது. இதனை நேரில் பார்வையிட்டு கலாம் புக்ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த மாராத்தான் ஓவியத்தினை உலக சாதனையாக அங்கிகரித்து சான்றிதழ் வழங்கினர்.

Views: - 1

0

0