கேரளா திருட்டு லாட்டரிகளை விற்ற நபர் கைது – தனிபடை போலீசார் தொடர் அதிரடி

12 November 2020, 9:37 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே கேரளா திருட்டு லாட்டரிகளை விற்ற நபரை தனிபடை போலீசார் கைது செய்தனர் .

திருச்சி மாவட்ட எஸ்பி. உத்தரவின் கீழ் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்படுவோ மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் டி.எஸ்.பி.பால்சுதர் தலைமையில் தனிப்படை அமைப்பட்டது. தனிப்படை எஸ் ஐ. நாகராஜன் தலைமையிலான போலீசாருக்கு சமயபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா திருட்டு லாட்டரிகளை விற்பனை சிலர் செய்வதாக ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில், சமயபுரம் கடைவீதியில் அதிரடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

அதில், சூர்யா என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா திருட்டு லாட்டரிகளை விற்ற சமயபுரம் டீச்சர்ஸ் காலனி காவக்கார தெருவைச் சேர்ந்த அப்துல்லா என்பவரது மகன் முகமது யூசுப் (28) என்பவரிடமிருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ. 850, லாட்டரி விற்பனைக்கும் முடிவுகளுக்கும் பயன்படுத்திய ஆண்ட்ராய்டு செல்போன், லாட்டரி டிக்கெட்டுகனை பறிமுதல் செய்து முகமது யூசுமை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சமயபுரத்தில் பூக்கடையில் திருட்டு லாட்டரிகளை விற்ற 2 பேர்களையும், துறையூர் பகுதியில் கள்ள தனமாக மதுபானம் விற்ற நபரையும் தனிப்படை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 19

0

0