பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவர் கொலை: 2 பேர் கைது…

Author: kavin kumar
3 October 2021, 2:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த வீரன் மகன் முனியன். இவர் அதே ஊரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் செல்வம் என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு ரூபாய் 50 ஆயிரம் கடனாக முனியன் வாங்கி உள்ளார். பின்பு 2 வருடம் கழித்து அசல் மற்றும் வட்டியில் 6000 செல்வத்திடம் குறைவாக தந்தபோது மீதம் 6 ஆயிரம் ரூபாய் முனியன் தரவேண்டியிருந்தது. இந்நிலையில் செல்வம் 30.9.21 அன்று மீதி பணம் வாங்குவதற்காக முனியன் வீட்டிற்கு சென்றபோது முனியன் மகன் விஜயகுமார் வீட்டில் இருந்துள்ளார். இவர்களுக்கிடையே இது சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டதில்

செல்வம் அங்கிருந்த விறகு கட்டையால் விஜயகுமார் தலையில் அடித்ததில் பலத்த காயமடைந்தா விஜயகுமார்ரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் செல்வம் கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் சேர்ந்த ரங்கசாமி மகன் பழனி(ஆகியோர் மீது இறந்த விஜயகுமாரின் தந்தை முனியன் புகார் அளித்தார் புகாரியின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து,இருவரையும் கைது செய்தனர்.

Views: - 140

0

0