கன்னியாகுமரியில் புதிய கடைகள் கட்ட அனுமதி.! கொட்டும் மழையில் தீ விபத்து பகுதியை ஆய்வு செய்த தளவாய் சுந்தரம் தகவல்

12 January 2021, 4:14 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து பகுதியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரிவு தளவாய்சுந்தரம் பார்வையிட்டார் .

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 63 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின .இதனால் 2 கோடிக்கு மேல் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து இப்பகுதிகளை முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் பார்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர் . இந்நிலையில் அதே பகுதியில் புதிய கடைகளை கட்ட அனுமதி வழங்கி தருமாறு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேற்று டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் முன்னிலையில் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமியை நேரில் சந்தித்து மனு வழங்கினர்.

இன்று கொட்டும் மழையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரிவு தளவாய்சுந்தரம் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார் . தொடர்ந்து வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் பேசிய அவர் , உடனடியாக கடைகளை வியாபாரிகள் அவரவர் சொந்த செலவிலேயே கட்டுமாறு வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார். அதேபோல் பொங்கல் பண்டிகையை ஒட்டி மூன்று நாட்கள் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அரசு மறுக்கப்பட்டுள்ள நிலையில்,

சுற்றுலா பயணிகள் வர அனுமதி பெற்று தருமாறு தளவாய்சுந்தரத்திடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக வியாபாரிகளிடம் தளவாய்சுந்தரம் வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.தளவாய்சுந்தரத்தின் இந்த வாய்மொழி உத்தரவு வியாபாரிகளை மகிழ்ச்சியடை செய்துள்ளது.

Views: - 3

0

0