அரசு ஊழியர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: நாராயணசாமியிடம் பொதுமக்கள் மனு

25 September 2020, 8:53 pm
Quick Share

புதுச்சேரி: அரசு ஊழியர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி ஊர் பொதுமக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் சட்டபேரவைக்கு ஊர்வலமாக சென்று முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சின்னயாபுரம் பகுதியை சேர்ந்தவர் அரசு ஊழியர் கணேசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் , இந்த கொலை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து 6 நபர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் அரசு ஊழியர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று சின்னயாபுரத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல் சாலையிலிருந்து சட்டபேரவைக்கு ஊர்வலமாக நடந்து வந்து முதலமைச்சர் நாராயணசாமியிடம் அரசு ஊழியர் கணேசன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனு அளித்தனர்.

இதனைதொடர்ந்து ஊர் பொது மக்களிடம் பேசிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆளும் காங்கிரஸ் அரசு கணேசன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை என்றால் தாம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக கூறினார்.

Views: - 7

0

0