கோமாரியால் உயிரிழந்த கன்றுகள்: சட்டமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்

Author: Udhayakumar Raman
29 November 2021, 6:25 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கோமாரி நோய்க்கு மருத்துவமனைகளில் மருந்து இல்லாததால் ஏராளமான மாடுகள் இறந்து போனதாக கூறி உயிரிழந்த மூன்று கன்று குட்டிகளுடன் சட்டமன்றம் முன்பு இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் புதுச்சேரியில் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவி வருவதால்.அதை தடுக்க ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த பால் வியாபாரம் செய்யும் ராஜ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த மூன்று பெண் கன்று குட்டிகளை எடுத்து வந்து சட்டமன்றம் வாயில் முன்பு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்த ராஜ்குமார் கூறும்போது, அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தராததால் சுயமாக மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்து வருவதாகவும், கோமாரி நோய் தாக்கி தன்னிடம் இருந்த ஏராளமான மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்து வருவதால் அதை தடுக்க கால்நடை மருத்துவமனைகளுக்கு சென்று கேட்டால் மருந்து இல்லை சொல்வதால் தான் வளர்த்து வந்த உயர்ரக ஜெர்சி ரக பெண் கன்றுக்குட்டிகல் ஒரே நேரத்தில் இறந்து விட்டதால் இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாடுகளுக்கு உரிய சிகிச்சையளிக்காமல் அலட்சியம் செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Views: - 166

0

0