உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கழக பேச்சாளர்கள் உதவிய ராஜேந்திர பாலாஜி

Author: Udayaraman
13 October 2020, 2:44 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அதிமுக தலைமை கழக பேச்சாளரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்தை உதவித் தொகையாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் முத்துராமலிங்கம் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டு காலமாக அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், வருமானமின்றி வறுமையால் வாடி வந்துள்ளார். இதை அறிந்த தமிழக பால்வளத் துறை அமைச்சர் அவருக்கு உதவும் நோக்கில்,

வறுமையால் வாடும் தலைமை கழக பேச்சாளர் முத்துராமலிங்கத்தின் வீட்டிற்க்கு சென்று அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாயினை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவருக்கு உதவி தொகையாக வழங்கினார்.

Views: - 37

0

0