மலர்சந்தை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட அனுமதி வழங்க கோரிக்கை: பூ கட்டும் தொழிலாளிகள் மனு

Author: kavin kumar
6 October 2021, 7:29 pm
Quick Share

மதுரை: மதுரை மலர்சந்தை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட அனுமதி வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பூ கட்டும் தொழிலாளிகள் மனு அளித்தனர்.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டுவந்த மதுரை மலர்சந்தையில் போதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறி கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தற்காலிக மலர்சந்தை மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்துநிலையத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 50நாட்களுக்கு மேலாக ஆம்னி பேருந்துநிலையத்தில் மலர்சந்தையில் செயல்பட்டுவந்த நிலையில் போதிய வசதி்இல்லாத நிலையில் மீண்டும் பழைய இடத்திற்கு மலர்சந்தை செயல்பட அனுமதி வேண்டும் என வியாபாரிகளும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் இன்று பூ காட்டும் தொழிலாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மலர் சந்தை இடமாற்றம் தொடர்பாக பழைய இடத்திலேயே செயல்பட அனுமதிக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தனர் இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Views: - 170

0

0