குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்த அழைத்து சென்ற 6 சிறுவர்கள் மீட்பு

23 February 2021, 1:36 pm
Quick Share

திருவண்ணாமலை: செங்கத்தில் 13 வயது சிறுவர்களை குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்த அழைத்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை, ராமாபுரம், மேல்ராவந்தவாடி உள்ளிட்ட மூன்று கிராமங்களில் உள்ள இருளர் காலனி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவர்களை வெளி மாநிலத்திற்கு குழந்தை தொழிலாளிகளாக பயன்படுத்த அழைத்து சென்ற ராமாயி என்ற பெண்னை செங்கம் மகளிர் போலீசார் கைது செய்து ஆறு சிறுவர்களை குழந்தைகள் நல காப்பகத்திற்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செங்கம் அடுத்த நீப்பத்துறை ,ராமாபுரம் , மேல்ராவந்தவாடி பகுதியில் உள்ள இருளர் காலனியை சேர்ந்த பிரதாப், பச்சையப்பன், மணிகண்டன், சக்தி, ரஞ்சித், அஜித் என்ற 13வயது சிறுவர்களை வெளிமாநிலத்திற்கு குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்த அவரது பெற்றோர்களிடம் பணம் கொடுத்துவிட்டு அரசு பேருந்தில் அழைத்து செல்லவதாக செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து நீப்பத்துறையிலிருந்து செங்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்திலிருந்து ஆறு 13 வயது சிறுவர்களுடன் வந்த பெண்ணை மடக்கிபிடித்தனர். மேலும் ஆறு சிறுவர்களையும் மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி வைத்துள்ளனர். கொரோனா காலத்தில் வேலைவாய்ப்புகள் இன்றி பட்னியுடன் வாழ்ந்து வந்ததாகவும்,

இதனால் தங்களது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பிவைத்ததாகவும், இனி பிள்ளைகளை வேலை அனுப்ப மாட்டோம் குழந்தைகளை எங்களுடன் அனுப்ப வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசாரின் காலில் விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 3

0

0