திருச்சி மாநகர பகுதியில் ரூ2.34 லட்சம் அபராதம் – மாநகர காவல்துறை ஆணையர் தகவல்

15 April 2021, 2:26 pm
Quick Share

திருச்சி மாநகராட்சி ஆணையர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்று 2ம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும், 14 இடங்களில் பொதுமக்களுக்கு நோய் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1,174 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் தொகை சுமார் ரூபாய்.2,34,000/- விதிக்கப்பட்டது, தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 67வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய்.33,500/- அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் கொரோனோ நோய்த்தொற்றைக் குறைப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 19

0

0