நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சாமிநாதன் வலியுறுத்தல்

9 January 2021, 4:37 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டத்தை கூட்டணி கட்சியான திமுக புறக்கணித்துள்ளதால் முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்

பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் அறிவித்து ஒரு பதற்றமான நிலையை உருவாக்கியதன் காரணமாக மத்திய அரசு துணை ராணுவத்தை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் காங்கிரஸ் போராட்டம் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சாமிநாதன், போராட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூட பங்கேற்கவில்லை,

எனவே ஆளும் அரசு கூட்டணி கட்சி மற்றும் தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதால்
முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர், போராட்டம் என்ற பெயரில் தேர்தலுக்கான நாடகத்தை முதல்வர் நாராயணசாமி நடத்தி வருவதாகவும், புதுச்சேரியில் பாஜக எழுச்சி அலை உருவாகியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் தொடர்வதாகவும் தெரிவித்தார்

Views: - 27

0

0