தேர்தல் நடத்தை விதிமுறை மீறி மு.க ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல்

27 February 2021, 7:44 pm
Quick Share

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக சென்னை கொளத்தூரில் உள்ள மு.க ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்காக தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா நேற்று டெல்லியில் அறிவித்தார். அதன் படி தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலை முதலே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த காரணத்தினால் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் மூடப்பட்டு சீல் வைக்கும் பணி இன்று துவங்கியது.

தமிழகத்தின் பிரதான எதிர் கட்சி தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகம் கொளத்தூர் ஜவகர் நகர் 1 தெருவில் இயங்கி வருகிறது. இதனை திருவிக நகர் 6 வது மண்டல அதிகராரி பரந்தாமன் உத்தரவின் பேரில் , உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் , மாநகராட்சி அதிகாரிகள் சில மணி நேரம் முன்பு அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்

Views: - 2

0

0