6 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவரை கைது செய்து விசாரணை

Author: kavin kumar
11 October 2021, 3:29 pm
Quick Share

திருவள்ளூர்: பெங்களூரில் இருந்து சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற 3 கோடி ரூபாய் மதிப்பிலான 6 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கவுண்டர்பாளையம் வல்லூர் கிராமம் அருகே கன்டெய்னர் லாரிகள் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் காஞ்சிபுரம் சரக பொறுப்பு ஆய்வாளர் சாகுல் அமீது தலைமையில் மீஞ்சூர் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 20 மற்றும் 40 அடி கன்டெய்னர் லாரி இரண்டிலும் பான் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதை கண்ட போலீசார் ஓட்டுனர்கள் பழைய நாபாளையம் நாகராஜன், புது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கஜேந்திரன் இருவரை கைது செய்து அருகில் உள்ள கண்டைனர் முனையங்களில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் சோதனை செய்து அங்கு 2 சரக்கு வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சுமார் 6 டன் எடை கொண்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்து இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பெங்களூரிலிருந்து சென்னைக்கு விற்பனை செய்ய கண்டெய்னர் லாரி மூலம் கடத்தி கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. மீஞ்சூர் போலீஸார் இங்குள்ள பல கண்டனர் முனையங்களில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு சுமார் 6 ஆயிரம் கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 144

0

0