நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாட்களை விவசாய பணிக்கு அனுப்பவேண்டும்: விவசாயிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

Author: kavin kumar
2 October 2021, 3:32 pm
Quick Share

திருச்சி: நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாட்களை விவசாய பணிக்கு அனுப்பவேண்டும் என திருச்சியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளின் 3விரோத வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சேர்ந்த விவசாயிகள் கடந்த 300 நாட்களுக்கு மேலாக டெல்லியில் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் அவர்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் டெல்லிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று காந்தி ஜெயந்தி நாளான அன்று கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200 விவசாயிகள் நேற்று இரவு 10 மணிக்கு திருச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயில் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் நேற்று மாலை காவல்துறையினர் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை கன்னியாகுமரி செல்ல விடாமல் தடுத்து வீட்டுகாவலில் வைத்துள்ளனர். மேலும் வீட்டை சுற்றி ஸ்ரீரங்க சரக காவல்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் வீட்டு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐந்து விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருச்சி உட்பட பல்வேறு மாவட்ட சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் அய்யாக்கண்ணு, இந்தியா ஒரு ஜனநாயக நாடு விவசாயிகள் பேசுவதற்கும் ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்கு போவதற்கும் உரிமை உள்ளது. உற்பத்தியாகும் விவசாய பொருட்களுக்கு ஞாயமான விலை கோருவதற்காக டெல்லி போனாலும் கன்னியாகுமரிக்கு போனாலும் காவல்துறை தடுக்கிறது.ஏற்கனவே டெல்லியில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கும், வெளியே சென்று வருவதற்கும் உயர்நீதிமன்றத்தில் ஆணையை பெற்றிருக்கிறேன்.

பெறப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் எங்களை தடுப்பது கண்டிக்கத்தக்கது. நாங்கள் என்ன ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளா எனவே, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து இதற்கான நியாயத்தைக் கேட்க உள்ளோம், மாவட்டம் தோறும் 100நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும், அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 20 கூலியாக வழங்க வேண்டும், மோடி விவசாயிகளுக்கு நெல் மற்றும் கரும்பு க்கு இரட்டிப்பு லாபம் தரும் என தெரிவித்தார். தரவில்லை இப்பொழுதும் தரவில்லை என்றால் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது தான். இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு செல்லும் ஆட்களை விவசாய பணிக்கு அனுப்பினால் பாதி கூலியை நாங்கள் தர தயாராக இருக்கிறோம் எனக் கூறினார்.

Views: - 166

0

0