‘கொடை’யில் பாதுகாப்பற்ற கூடார அமைப்போர் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….
Author: kavin kumar8 August 2021, 6:28 pm
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கூடார (டென்ட்) அமைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் விசாகன் எச்சரித்துள்ளார்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர மர வீடு, கிராமிய சுற்றுலா, டென்ட் அமைத்து தங்குவது என புதுமை புகுத்தப்படுகிறது. சமீபகாலமாக பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி ‘டென்ட்’ அமைத்து பயணிகள் தங்குவதாக புகார் எழுகிறது.இவர்களுக்கு வனவிலங்கு அச்சுறுத்தல், விஷ, ஜந்து நடமாட்டம் போன்றவற்றுடன், மது போதை கேளிக்கை, பயர் கேம்ப், போதை வஸ்து பயன்படுத்துவது நடக்கிறது.வெளி மாநில இளைஞர்கள் பலர் இதில் தங்குகின்றனர்.
இதற்கு மத்தியரசு வழிகாட்டுதல்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதியின்றி பாறைப்பட்டி, புலியூர், கூக்கால், கிளாவரை என மேல்மலையில் தங்க வைக்கின்றனர். வெளிமாநில இளைஞர்களால் கொரோனா பரவலுக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், மலைப்பகுதியில் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் கூடாரங்கள் அமைத்து தங்குவோர் மற்றும் ஏற்பாடு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்துள்ளார். வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பெரும்பாலான கூடாரங்கள் அரசு அனுமதி பெறவில்லை. இதுபற்றிய விவரம் சேகரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
0
0