கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர்: மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்

15 November 2020, 7:04 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காடு கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற அரசு கல்லூரி மாணவர் கடல் அலை சீற்றம் காரணமாக இழுத்து செல்லப்பட்டு மாயமானார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் லோகேஷ் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லூரியில் BA இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது நண்பர்களுடன் பழவேற்காடு கடலில் குளித்தவர் அலையில் சீற்றம் காரணமாக கடல்நீரில் மூழ்கி மாயமானார்.

இவருடன் வந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் கல்லூரி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மற்றும் மீனவ கிராம மக்கள் காணாமல் போன லோகேஷ் உடலை கடற்கரையோர பகுதிகளில் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவன் கடலில் குளிக்க சென்று மூழ்கிச் மாயமான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 15

0

0