ஹரியானாவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி: திருச்சியில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Author: Udhayakumar Raman
2 September 2021, 5:34 pm
Quick Share

திருச்சி: ஹரியானாவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹரியான மாநிலம், சிர்சா மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பபோட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து திருச்சி, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 48 சிலம்பாட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தனுஷ்மேனன், சந்தோஷ் ( 45-50 கிலோ எடை பிரிவில் பரணித்தரன் ஆகியோர் தங்கபதக்கமும் வென்றார்கள். 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ( 40-45 கிலோ எடை பிரிவில்) மேக்டேலின் தங்கபதக்கம் வென்றனர் , (45-50 கிலோ எடை பிரிவில் டேவின்சி வெளிப்பதக்கம் வென்றனர்.17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ( 85-90 கிலோ எடை பிரிவில்) ஜிஜேந்திரா தங்கபதக்கமும் மற்றும் (90 கிலோ எடை பிரிவில்) சுதர்சன் வெள்ளி பதக்கமும் வென்றனர். 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் (35- 40 கிலோ எடை பிரிவில்) பிராதிக்க்ஷ,

(45-50 கிலோ எடை பிரிவில்) ஜெயகாக்ஷ்மி (55-60 கிலோ எடை பிரிவில்) நான்ஸி கிரிடா ஆகியோர் தங்கபதக்கமும், (40-45 கிலோ எடை பிரிவில்) தர்ஷினி (60-65 கிலோ எடை பிரிவில்) கிருத்திகா ஆகியோர் வெள்ளிபதக்கம் வென்றனர்.19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அக்ஷயா தங்கப்பதக்கம் வென்றனர். சீனியர் ஆண்கள் பிரிவில் பிரிவில் (60-65 கிலோ எடை பிரிவில்) பாலமுருகன் தங்கப்பதக்கம் வென்றனர். சீனியர் பெண்கள் பிரிவில் (40-45கிலோ எடை பிரிவில்) வர்ஷினி தங்கப்பதக்கம் வென்றனர். நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று ரயில் மூலம் திருச்சி திரும்பிய வீரர் – வீராங்கனைகளை சிலம்பாட்ட பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Views: - 113

0

0