இறந்த கோவில் மாட்டிற்கு கிராம மக்கள் மரியாதையுடன் உடல் அடக்கம்

Author: Udhayakumar Raman
24 June 2021, 1:31 pm
Quick Share

மதுரை: திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முத்தையா கோவில் மாடு (அர்த்தநாரிஸ் வர்)இறந்து விட்டது பெருங்குடி மக்கள் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

பெருங்குடி அதன் சுற்றுபுற கிராம மக்களின் காவல் தெய்வமான முத்தையா கோவில் சாமிக்கு 12 ஆண்டுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் சார்பாக அர்த்தநாரிஸ்வரர் மாடு முந்தையா கோவிலுக்கு நேர்த்தியா விடப்பட்ட மாடு. இந்த மாடு ஊருக்குள் யாரையும் முட்டியதும் இல்லை. இந்தமாடு முன்புறம் காளை மாடு அமைப்பும் பின்புறம் பசு மாடு அமைப்பும் கொண்டது (மூன்றம் பாலின மாடு ) இன்று உயிர் இழந்தது. இதனால் பெருங்குடி கிராமம் முழுவதும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

கிராம மக்கள் ஒன்று கூடி இறந்த மாட்டிற்கு மஞ்சல் குங்குமம் வைத்து புதிய வேஸ்டிகள் காணிக்கை செலுத்தியும், கோவில் மாட்டிற்கு உரிய மரியாதை செலுத்தியும் அனைவரும் ஒன்று கூடி இறந்த மாட்டை முத்தையா கோவில் வளாகத்தில் J. C P உதவியும் பள்ளம் தோண்டி இறுதி மரியாதை செய்து பால் தயிர் இளநீர் அபிசேகம் செய்து (அர்த்தநாரிஸ்வரர்) மாட்டை அடக்கம் செய்தனர். மாடு உயிர் இழந்ததால் இந்த பகுதி முழுவதும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 180

0

0