சொத்து பிரச்சினை:தம்பியை அரிவாளால் வெட்டி கொன்ற அண்ணன் காவல் நிலையத்தில் சரண்…

Author: kavin kumar
3 November 2021, 2:58 pm
Quick Share

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே சொத்துப் பிரச்சனை காரணமாக தம்பியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அண்ணன் பசுவந்தனை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தெற்குபொம்மையாபுரம் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி மகன் முனியசாமி (53) அப்பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவருடைய உடன் பிறந்த தம்பி முருகன் (45) என்பவர் நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் முனியசாமி தனது தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு நள்ளிரவில் பசுவந்தனை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 437

0

0