குழந்தைகளுக்கு கல்வி கனவு சிதைந்துவிட்டது: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி….

Author: Udhayakumar Raman
23 October 2021, 6:56 pm
Quick Share

அரியலூர்: கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்கு கல்வி கனவு சிதைந்துவிட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அரியலூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். பின்னர் உணவு பாதுகாப்பு துறை மூலம் ஏற்பாடு செய்யபட்டிருந்த விழிப்புணர்வு அரங்கினை பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய போது,கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்கு கல்வி கனவு சிதைந்து போய்விட்டது என்றும் ஒரு தலைமுறை கல்வியே காணாத தலைமுறையாக மாறிவிடுமோ என்ற அச்சமும் உள்ளதாக கூறினார். மேலும் குழந்தைகளுக்கு கவ்வி என்பது அவசியமான ஒன்று என்றும் எதிர்கால சந்ததியினரை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது கூறினார். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் எனவே அது குறித்து அச்சம் தேவையில்லை என கூறினார்.

Views: - 120

0

0