தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் திருட்டு: 22 சவரன் நகை மற்றும் ரூபாய் 10,000 கொள்ளை

Author: kavin kumar
23 August 2021, 2:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை, ரூபாய் 10,000 கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு ஓரிக்கை சாலையில் அமைந்துள்ளது வடிவேல் நகர். இந்நகரில் அசோக் குமார் என்பவர் தனது மனைவி சுபா உடன் வசித்து வருகிறார்.பணி காரணமாக திருவண்ணாமலையில் தங்கி இருந்து வாரம் ஒரு முறை அசோக்குமார் இங்கு வருவது வழக்கம். அதேபோல் அவரது மனைவி ஒரகடம் பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த ஒரு மாதம் முன்பு இவர்களது குழந்தைக்கு காதணி விழா நடைபெற்ற போது அன்பளிப்பாக தங்க மோதிரம் உறவினர்களால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டினுள் இருந்த அறையில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் சிதறி கிடந்தன. இதை அடுத்து பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த 22 சவரன் நகை , பத்தாயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து காஞ்சி தாலுக்கா காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 538

0

0