முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: முட்டைகளை சூறையாடிய மக்கள்….

27 August 2020, 3:04 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே நாமக்கல்லில் இருந்து வேலூருக்கு முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் இன்று காலை நாமக்கல்லில் இருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு 21 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியை வேலூர் விரிஞ்சிபுரம் பகுதியை சேரந்த ஜானகிராமன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஜானகிராமன் அயர்ந்த தூங்கியுள்ளார். அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குளானது.

இவ்விபத்தில் ஓட்டுநருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சாலையில் கவிந்த லாரியை மீட்டு சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்து இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் லாரியில் உடைந்த முட்டைகளை சூறையாடினர்.