மதுரையில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளம்….!!
28 November 2020, 12:36 pmமதுரை: மதுரையில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கோரிப்பாளையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், ஆற்றிற்கு வரும் கால்வாயில் ஆள் உயரத்திற்கு நுரை பொங்கி எழுந்தது.
வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஒபுலா படித்துறை அருகே இருகரைகளையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக போலீசார் அங்கு போக்குவரத்தை தடை செய்துள்ளனர். செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியில், வைகை ஆற்றில் கலக்கும் கால்வாய் ஒன்றில் ஆளுயரத்திற்கு நுரை பொங்கி வழிந்தது. இதனை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீரை பீய்ச்சி அடித்து நுரையை கலைத்துவிட்டனர்.
இதுமட்டுமின்றி அங்கு பொங்கி வழிந்த நுரையை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
0
0