தமிழகத்தில் வேலை தமிழர்களுக்கே… விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம்…

24 August 2020, 3:54 pm
Quick Share

சேலம்: தமிழகத்தில் வேலை தமிழர்களுக்கே என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது வீடுகள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே என்ற தீர்மானத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் கட்சியினருக்குஅறிவுறுத்தி இருந்தார். அதன்படி சேலம் மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தங்களது வீடுகள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் தலைமையில் நடைபெற்றது. கிச்சிபாளையம் பாத்திமா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் திரளாக கலந்துகொண்டு, நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேசம் ஒரே கல்வி ஒரே ரேஷன் ஒரே மொழி என்ற கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே என்ற தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் நம்மிடையே கூறுகையில், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில வேலை அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது போன்று தமிழகத்தில் உள்ள வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கு என்ற தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும் என்றும் மாறாக மத்திய அரசுக்கு துணை போக இந்த சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிறைவேற்றாத பட்சத்தில் கட்சியின் தலைமையை ஒப்புதல் பெற்று இந்தக் கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் பிரச்சனை ஒத்திவைத்து மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Views: - 21

0

0