காய்கறிகளை விற்க முடியாமல் தவிக்கும் கிராமம் : சாலையை மேம்படுத்த மக்கள் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2021, 2:12 pm
Road Problem -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை சேதமாகி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இவ்வாறான சூழலில் தொடர்ந்து வரும் நிலையில் கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வழியே காய்கறிகளை ஏற்றி செல்ல முடியாமலும் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியின் வழியே பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் சென்றுவர பெரும் இடையூறு இருந்து வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நாயுடுபுரம் செல்லக்கூடிய பிரதான சாலையும் சேதமடைந்த காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

சேதமடைந்த சாலைகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது..எனவே வில்பட்டி பிரதான சாலை நாயுடுபுரம் சாலை உள்ளிட்ட சாலைகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Views: - 317

0

0