ஏரியில் செயல்படும் மண் குவாரியை மூட கோரி கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

29 March 2021, 1:58 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரியில் செயல்படும் அரசு மண் குவாரியால் விவசாயம் நிலத்தடி நீராதாரம் குடிநீர் பாதிக்கப்படுவதால் அதனை மூட கோரி கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு ஏரியில் அரசு மண் குவாரி செயல்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன் தலைமையில் லாரிகளை மறித்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அதே ஏரியில் மண் குவாரி செயல்பட்டபோது அளவுக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி மண் அள்ளுவதை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்,

தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் மண்குவாரி செயல்படுவதாகவும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் விவசாயிகளின் பாசன நீர் ஆதாரம் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குவாரியில் மண்அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சோழவரம் போலீசார் சமரசம் மேற்கொண்டனர். மண் குவாரியை மூடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Views: - 10

0

0