வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் சிறப்பு முகாமை ஆட்சியர் ஆய்வு

22 November 2020, 5:49 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்காளர் முகாமில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான டாக்டர் கே செந்தில்ராஜ் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 44 ஆயிரத்து 432 வாக்காளர்கள் இடம்பெற்றனர். இதைத்தொடர்ந்து, புதிய வாக்காளர்களை சேர்க்கும் விதத்திலும், வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம் செய்துகொள்ள ஏதுவாகவும் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி விஇ ரோட்டில் உள்ள ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் சிறப்பு முகாமை இன்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த முகாம்களில் மாற்றத்திற்காக விண்ணப்பிப்பவர் அவருடைய விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, அவை அனைத்துமே வரும் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடக்கூடிய வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் புதிதாக சேர்க்கை அவருடைய பெயரும் வரும் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடக்கூடிய இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்று அவர் கூறினார்.

எனவே டிசம்பர் மாதம் இறுதியில் 18 வயது பூர்த்தியாக கூடியவர்கள் கூட இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார். இந்த முகாம்களில் விண்ணப்பங்களை கொடுக்க முடியாதவர்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தினசரி விண்ணப்பங்கள் வழங்கப்படும், அதனைப்பற்றி வழங்கலாம் என்று கூறினார். முகாம்களில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் சேவை மையங்களில் சென்று இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Views: - 0

0

0