காதில் காயத்துடன் முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

19 January 2021, 7:08 pm
Quick Share

நீலகிரி: மசினகுடி பகுதியில் காதில் காயத்துடன் திரியும் காட்டு யானையை பிடிக்கும் பணியில் 4 கும்கி யானைகள் மற்றும் இரண்டு கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர். மசினகுடியிலிருந்து முதுமலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக யானை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதியாக உள்ள சிங்கார வனச்சரகத்தில் சுமார் 40 வயதுள்ள ஆண் யானை ஒன்று கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக உடலில் காயத்துடன் சுற்றி திரிகின்றது. இந்த யானைக்கு உடலில் உள்ள காயம் ஆறுவதற்காக பழங்களில் மருந்து மாத்திரைகள் வைத்து வனத்துறையினர் வழங்கியதோடு அந்த யானையை கண்காணித்தும் வந்தனர். தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி கால்நடை மருத்துவ குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதன் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தை சுத்தப்படுத்தி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து பழங்களில் மருந்து மாத்திரைகள் வைத்தும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் யானை அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் சாலைப் பகுதி மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் விடுவதால் யானையால் பொதுமக்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் குழுவினர் இந்த யானையை அவ்வப்போது வனப்பகுதிக்குள் விரட்டியும் வருகின்றனர். இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பாக காலை சிங்காரா சாலையில் யானை நின்றதால் சுமார் 4 மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது காதுப் பகுதி காயம் அழுகி கொட்டியும் வதோடு இரத்தம் தொடர்ந்து வடிகின்றது.

இந்த யானை தற்போது நிற்கும் மசினகுடி ரிவர் வேலி வனப்பகுதியில் யானைய கண்கானித்து வரும் வனத்துறையினர் பழங்களில் மாத்திரைகள் வைத்து வழங்கினர். யானையின் காதில் புண் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே காது பகுதியில் புன் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இரத்தம் வடிவதை நிறுத்த பழங்களில் மாத்திரைகள் வைத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் விஜய், வசீம்,கிருஷ்ணா, கிரி கும்கி யானைகள் துணையுடன் கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.

அங்கிருந்து யானை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு வழியிலேயே யானை இறந்தது இதனால் மருத்துவக்குழு மற்றும் வனத்துறையினர் கவலையடைந்தனர். மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே தகவல் தெரிவிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

Views: - 0

0

0