பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதறி பலி

Author: Udhayakumar Raman
31 July 2021, 6:57 pm
Quick Share

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பலியாகினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் சாட்சியாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே வி. சொக்கலிங்காபுரத்தில் உள்ளது. டிஆர்ஓ லைசன்ஸ் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் எட்டு அறைகள் உள்ளன. இன்று காலை வழக்கம் போல் தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது மருந்து கலவை அறையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவகாசி அருகே மீனம்பட்டி ஜான்சிராணி காலனி சேர்ந்த ஆனந்தராஜ் என்ற தொழிலாளி உடல் சிதறி பலியானார்.

சம்பவத்தை கேள்விப்பட்ட சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பலியான ஆனந்தராஜ் உடல் ஆங்காங்கே மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் மீட்டனர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர் . சம்பவ இடத்துக்கு சிவகாசி டிஎஸ்பி பாபு பிரசாந்த், பட்டாசு அத்திப்பட்டி தனி தாசில்தார் சிவசோதி மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 127

0

0