வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Author: kavin kumar
17 August 2021, 7:57 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு திருச்சி தென்னுார் புத்துமாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற பிரபாகரனை தென்னூர் விவேகானந்தர் சாலை, மேட்டுத்தெருவில் ராஜா, தினேஷ்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தில்லைநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரயைும் கைது செய்து திருச்சி மத்திய சிறை அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

தற்போது வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி அளித்த தீர்ப்பில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், மேலும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை தொடர்ந்து கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட நபர் அதனை தடுக்க முயன்ற போது தடுக்க சென்றவரை வெட்டியதால் தினேஷ்குமாருக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 1வருடம் சிறை தண்டனை விதித்து உத்தர விட்டார்.

Views: - 203

0

0