இலங்கையில் 13 மணி மின்சார தடை : எரிபொருள் பற்றாக்குறை எதிரொலியால் பள்ளிகள், அலுவலகங்கள் மூட அரசு உத்தரவு

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 9:39 pm
Fuel Office Close -Updatenews360
Quick Share

நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இங்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. நம் நாட்டில் இருந்து அரிசி, மருந்துகள், மீனவர்களுக்காக டீசல் அனுப்பி உதவப்பட்டு வருகிறது.

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அடுத்த வாரம் மூடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக வாகன போக்குவரத்து குறையும் என இலங்கை அரசு நம்புகிறது.

உணவுப் பொருள் உற்பத்தியை பெருக்க, இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தரிசாககிடக்கும் அரசு நிலத்தில், ராணுவ வீரர்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 1307

0

0