17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் : குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2022, 6:06 pm
Pocso- Updatenews360
Quick Share

கரூர் : பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த உடையாபட்டி கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சார்ந்த பிரான்சிஸ் சேவியர் (வயது 30) என்ற இளைஞர் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து சிறுமியிடம் கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சிறுமி சத்தம் போடவே, இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு வெளியில் ஓடிச் சென்று விட்டார். இது தொடர்பாக சிறுமியின் பாட்டி கடந்த 25.07.2021 அன்று குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று இதனை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, அத்துமீறி சிறுமியின் வீட்டில் நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், குற்றவாளி இளைஞருக்கு குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதனை அடுத்து சிறையில் அடைக்க போலீசார் குற்றவாளியை அழைத்துச் சென்றனர்.

Views: - 396

0

0