15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… திருமணம் செய்ய வற்புறுத்திய 70 வயது முதியவர் : காவல் நிலையத்தில் திரண்ட மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 7:41 pm
15 yrs old Harrassment - Updatenews360
Quick Share

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் கிராமம். இந்த கிராமத்தில் ஒரு பகுதியில் 60க்கும் மேற்பட்ட கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் குடிசை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கல்வி பயின்று வரும் நிலையில் 15 வயது சிறுமியை இதே பகுதியில் வசித்து வரும் பாபுஜி என்ற 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு செய்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் இதனால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Views: - 497

0

0