8 ஆம் வகுப்பு மாணவி கட்டிப்போட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரம் : Group Study என கூறி சக மாணவர்கள் செய்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 6:09 pm
Student Gang rape - Updatenews360
Quick Share

சென்னை : காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை கட்டிப்போட்டு சக மாணவர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவர்கள் சமீப காலமாக பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காசிமேடு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு 15 வயதும், 2வது மகளுக்கு 13 வயதும், 3-வது மகளுக்கு 11 வயதும் ஆகிறது.

இவர்களின் தாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 2-வது மகளான 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவருடன் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்கு சென்று படிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த நிலையில் 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடு புகுந்தனர்.
பின்னர் கதவை பூட்டிக்கொண்டு மாணவியை கட்டிப்போட்டனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து மாணவியின் ஆடைகளை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதையடுத்து 4 மாணவர்களும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர் 4 பேரும் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடுமையால் அதிர்ந்துபோன மாணவி இது பற்றி யாரிடமும் சொல்லாமலேயே இருந்தார். இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து முதலில் தனது தங்கையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் தாய்க்கு தெரிய வந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தாய் இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார்.

அவர் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினார். இது தொடர்பாக மாணவியின் தாய் ராயபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து உண்மை ஊர்ஜிதம் ஆனதால், 4 மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர். இந்த சம்பவம் பெண் பிள்ளைகளை பள்ளிகளக்கு அனுப்பும் பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 681

0

0