என்னது 2015ஐ விட பெட்டரா? கேள்வி கேட்ட அரசியல் கட்சி பிரமுகர்.. பதில் பேச முடியாமல் போனை கட் செய்த இயக்குநர் லிங்குசாமி!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 10:54 am
Lingusa
Quick Share

என்னது 2015ஐ விட பெட்டரா? கேள்வி கேட்ட அரசியல் கட்சி பிரமுகர்.. பதில் பேச முடியாமல் போனை கட் செய்த இயக்குநர் லிங்குசாமி!

மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் உழைப்பை பாராட்டி இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னைக்கு வர விமானங்கள் ஏதும் இல்லாததால் கடந்த 3 நாட்களாக தஞ்சாவூரில் இருந்தேன். சென்னை மழை நிலவரத்தை பார்த்து கவலையடைந்தேன். நேற்று இரவு இங்கு வந்து இறங்கியதும், அடையாறில் ஒருவரை இறக்கி விடுவதற்காக காரில் சென்றேன்

ஏர்போர்ட்டில் இருந்து அடையாறு சென்றுவிட்டு பின்னர் வளசரவாக்கம் வரும்வரை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் என்ன அழகா வேலை பார்த்திருக்காங்க. 2015-ம் ஆண்டு வெள்ள பாதிப்பை பார்த்தாலோ என்னவோ இம்முறை சரியான திசையில் முன்னேறி சென்றுகொண்டிருப்பது தெரிகிறது.

தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி அங்கிருக்கும் பலரை மீட்க வேண்டும். இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் இதனை விரைவுபடுத்தும் மற்றும் விரைவில் நகரத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்ய விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவுக்கு ஒரு பக்கம் ஆதரவு விமர்சனங்கள் வந்தாலும் பெரும்பாலானோர் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பிரமுகர் ஒருவர் லிங்குசாமிக்கு போன் போட்டு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில் லிங்குசாமியிடம் மெயின் ரோட்டை மட்டும் நீங்கள் பார்த்துவிட்டு ட்விட்டரில் பதிவிடுகிறீர்கள், எதற்காக 2015 ஆண்டுடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என கேட்க, லிங்குசாமி பதில் பேச முடியாமல் கட் செய்துவிட்டார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 211

0

0