பயிற்சியின் போது கோர விபத்து : ஹெலிகாப்டர் விழுந்து எரிந்து சாம்பல்.. தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானி உட்பட 2 பேர் பலி…!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2022, 1:46 pm
Telenagana Helicopter Accident - Updatenews360
Quick Share

தெலங்கானா : மலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இரண்டு விமானிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் கால்வாயை ஒட்டிய பகுதியில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடட் என்ற பெயரிலான தனியார் விமான பயிற்சி நிலையம் உள்ளது.

இன்று மதியம் தமிழ்நாட்டை சேர்ந்த பயிற்சி விமானியான பெண் மகிமா மற்றும் விமானி ஒருவர் ஆகியோர் ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக சென்றனர். அப்போது துங்கதுர்தி கிராமம் அருகே அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்து சாம்பலானது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து கருகிவிட்டனர் .இந்த விபத்தை அந்த பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் நேரில் பார்த்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் விமான பயிற்சி நிறுவன அதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்த காரணத்தால் மின்சார கம்பத்தில் மோதி விழுந்து நொறுங்கி பற்றிய எரிந்ததாக தெரியவந்துள்ளது.

Views: - 843

0

0