திருச்சி துப்பாக்கிசுடும் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் : கையை அசைத்து உற்சாகம்.. மாஸ் காட்டி ரசிகர்கள் ஆராவாரம்!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 12:06 pm
Trichy Ajith - Updatenews360
Quick Share

திருச்சி கேகே நகரில் உள்ள காவல்துறையினருக்கு சொந்தமான திருச்சி ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

போட்டிகள் ரைபில் மற்றும் பிஸ்டல் பிரிவுகளில் கீழ் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று கார் மற்றும் பைக் போட்டிகளில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கேற்று வருகிறார். 10மீ, 25 மீ மற்றும் 50மீ பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து திருச்சி ரைபில் கிளப் வெளியே திரண்டு இருந்த ரசிகர்களை பார்த்து வெற்றிக்கான சிம்பல் தம்ஸ் அப் செய்து விட்டு சென்றார். நடிகர் அஜித்குமார் போட்டியில் பங்கேற்றுள்ளதால் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Views: - 648

1

0