திமுகவை வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம்… விரைவில் அதனை மக்கள் செய்வார்கள் : அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 7:18 pm
Quick Share

ராணிப்பேட்டை ; வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் தருவார்கள் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதிக்க்ஷா அவ்லியா தர்காவில், தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், எடப்பாடி பழனிச்சாமி கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவதற்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்த சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வக்பு வாரிய முன்னாள் தலைவரும், கழகத்தின் அவைத்தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு கட்சியின் நிர்வாகிகளுடன் தர்காவில் சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த தமிழ் மகன் உசேன் பேசியதாவது :- தமிழகத்தில் நிச்சயமாக இந்த விடியா திமுக அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம். விரைவில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரும் வேளையில், சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விடிய அரசின் மீது ஏற்பட்ட பகை உணர்வு அறியாமல் வாக்குகளை செலுத்தி விட்டோமே என்று குழம்பி கொண்டிருக்கும் வேளையில், மக்கள் கூடிய விரைவில் வீடிய திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதே நிச்சயம், என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் எம்,ஜி,ஆர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சி போல, தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் வருகின்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வாக்குகளை தருவார்கள், என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி உள்பட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Views: - 894

0

0