எக்கசக்க லிப்லாக், படுக்கையறை…. கணவரை வச்சி செய்த ராஷ்மிகா – புகழ்ந்து தள்ளிய ஆலியா பட்!

Author: Shree
2 December 2023, 4:53 pm
rashmika animal
Quick Share

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

முன்னதாக ராஷ்மிகா அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பாய் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் இப்படத்தை குறித்து புகழ்ந்து பாராட்டியுள்ள ரன்பீர் கபூரின் மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ” அனிமல் படம் தாறுமாறாக உள்ளது. சந்தீப் ரெட்டி வங்கா போல ஒரு ஆள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார். அங்கிள் அனில் கபூர் நடிப்பு வேறலெவல். குறிப்பாக நானும் கிரஷ்மிகா க்ளப்பில் இணைந்துவிட்டேன். அவ்வளவு அற்புதமாக இருந்தது உங்களது கெமிஸ்ட்ரி என பாராட்டி தள்ளியுள்ளார் ஆலியா பட்.

Views: - 142

0

0