தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.. 41 பேரை மீட்க இறுதிக்கட்டப் போராட்டம் : மீட்பு பணிகளில் தமிழ்நாட்டினரும் பங்களிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 2:41 pm
Tunnel - Udpatenews360
Quick Share

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.. 41 பேரை மீட்க இறுதிக்கட்டப் போராட்டம் : மீட்பு பணிகள் தமிழ்நாட்டினரும் பங்களிப்பு!!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் என பலர் 17 நாட்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலி துளையிடும் முறை எனும் மனிதர்கள் மூலம் துளையிடும் முறையில் நல்ல பலன் கிடைத்த்து. இன்னும் சற்று நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

துளையிடும் பணிகள் முழுதாக நிறைவு பெற்று விட்டது. இன்னும் ஒரு குழாய் மட்டும் உள்ளே செலுத்த வேண்டி இருந்தது. அந்த பணியும் தற்போது நிறைவு பெற்றதை தொடர்ந்து, தொழிலார்களை மீட்கும் பணியை மீட்புப்படையினர் மும்முரமாக துவங்கியுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களை உடனடியாக வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்கள் சுரங்கத்தினுள் தயார் நிலையில் உள்ளன. இன்னும் சில மணிநேரத்தில் தொழிலாளர்கள் வெளியே வந்துவிட்டனர் என்ற மகிழ்ச்சியான செய்திகள் நமக்கு கிடைக்க உள்ளன.

Views: - 249

0

0