திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் இப்படியா? கடும் மோதலில் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்!

Author: Shree
29 November 2023, 12:25 pm
keerthy pandian ashok selvan
Quick Share

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ashok selvan

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னெவன்றால், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள சபநாயகன் திரைப்படமும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படமும் ஒரே நாளில் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது. இதனால் யாருடைய படம் வெற்றிபெறும் என்பதில் கணவன் மனைவிக்கு போட்டியாக இருக்கிறதாம்.

Views: - 215

0

0